சேலம்,
சேலத்தில் மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, காமலாபுரம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
இதனால் அச்சத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.
இந்த நில அதிர்வு பற்றி பொதுமக்கள் சிலர் கூறும்பொழுது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும்பொழுது இந்நில அதிர்வு உணரப்பட்டது என தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று தர்மபுரியில் பென்னாகரம் அருகே ஏரியூர் சுற்று வட்டார பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. இந்த நில அதிர்வு 7.48க்கு ஏற்பட்டு 2 நிமிடங்கள் வரை நீடித்தது.