ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் அச்சுதன் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை உள்ளது. நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
நேற்று காலை வழக்கம் போல கடையை திறந்த சிறுது நேரத்தில் கடைக்குள் பாம்பு இருப்பதை கண்டு ஊழியர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தனர்.
உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஜவுளிக்கடையில் புகுந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.