தமிழக செய்திகள்

லாரி கடத்தலில் கைதான முன்னாள் அமைச்சர் மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

முந்திரி பருப்புடன் லாரி கடத்தப்பட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து கடந்த மாதம் 26-ந் தேதி ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தூத்துக்குடி நோக்கி வந்தது.

அந்த லாரியை ஹரி என்பவர் ஓட்டி வந்தார். தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை அருகே வந்தபோது, தூத்துக்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங் (39), விஷ்ணுபெருமாள் (26), பாண்டி (21), மாரிமுத்து (30), செந்தில்முருகன் (35), ராஜ்குமார் (26), மனோகரன் (36) ஆகிய 7 பேரும் சேர்ந்து முந்திரி பருப்புடன் லாரியை கடத்தி சென்றனர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 7 பேரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்த நிலையில் ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஞானராஜ் ஜெபசிங்கை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து இதற்கான உத்தரவு நகலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாளையங்கோட்டை ஜெயிலில் அதிகாரிகளிடம் வழங்கினார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை