அழகர்கோவில்,
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு நேற்று மாலையில் விழா தொடங்கியது. இதில் மாலை 6 மணிக்கு பல்லக்கில் தேவியர்களுடன், கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி ஆடி வீதிகள், பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில் வழியாக சென்று வசந்த மண்டபத்துக்குள் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன், எழுந்தருளினார். அங்கு பட்டர்கள் வேத மந்திரங்களுடன் பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் அதே பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி சென்று காவிலுக்குள் போய் இருப்பிடம் சேர்ந்தார். வருகிற 14-ந் தேதி மாலையில் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார், நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.