தமிழக செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா கலை நிகழ்ச்சியில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் கதை

தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை விளக்கும் வகையில் ‘தமிழ் மண்’ என்ற பெயரில் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் ஆர்கடி வோர்கோவிச், துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர். இந்த நிறைவு விழாவில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். முன்னதாக இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் மானுவல் ஆரோனுக்கு முதல்-அமைச்சர் நினைவு பரிசு வழங்கினார்.

இந்த செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் வண்ணமயமான ஒளி, ஒலி அமைப்புகளைக் கொண்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் மாபெறும் வீரர்கள் ஆற்றிய பங்கை விளக்கும் வகையில் 'தமிழ் மண்' என்ற பெயரில் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசனின் பின்னனி குரலில் தமிழர்களின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவிலும் அதே போன்ற கண்கவர் ஒலி, ஒளி காட்சி அமைப்புகளுடன் தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறு, கமல்ஹாசனின் பின்னனி குரலுடன் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்