தமிழக செய்திகள்

சாலையை சீரமைத்து தரக்கோரி நாற்று நடும் போராட்டம்

அச்சரப்பாக்கத்தில் சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஒரத்தியில் நெடுஞ்சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் பல மாதங்களாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் இதுவரை செயல்படுத்தாத காரணத்தால் தற்போது பெய்த மழையால் இந்த சாலை மிகவும் மோசமாகி போக்குவரத்துக்கு பாதிப்புக்குள்ளானது. இந்த வழித்தடத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும் இந்த சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஏராளமானோர் இந்த இடத்தில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைகின்றனர். இந்த நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி அச்சரப்பாக்கம் மண்டல பா.ஜ.க. நலத்திட்ட பிரிவு தலைவர் தனஞ்செழியன் தலைமையில் பொதுமக்கள் ஏராளமானோர் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை