தமிழக செய்திகள்

போலீசாருக்கு ராக்கி கயிறு கட்டிய மாணவிகள் நெற்றியில் திலகமிட்டு இனிப்பு ஊட்டி விட்டனர்

சகோதரத்துவ பாசத்தை வெளிப்படுத்தும் ரக்ஷாபந்தன் விழா நேற்று கொண்டாடப்பட்டது

சென்னை,

 சென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகள் வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு நேற்று வந்தனர். அங்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு மற்றும் போலீசாரின் கையில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ராக்கி கயிறை கட்டினார்கள்.

பின்னர் போலீசாரின் நெற்றியில் திலகமிட்டு வாயில் இனிப்பு ஊட்டி விட்டனர். அப்போது மாணவிகளுக்கு இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது அவர், "போலீசார் உற்ற நண்பராக மட்டுமின்றி சகோதரர்களாகவும் இருக்கிறோம். உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் எப்போது வேண்டும் என்றாலும் போலீஸ் நிலையத்துக்கு வரலாம். நீங்கள் நன்றாக படித்து உங்களுடைய பெற்றோருக்கும், சமுதாயத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும்" என்று கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...