கோப்பு படம் 
தமிழக செய்திகள்

என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு 20-ந் தேதி தொடங்குகிறது

என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.

தினத்தந்தி

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடந்தது.

இதில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7 ஆயிரத்து 324 பேர் சேர்ந்தனர். இதுதவிர சிறப்பு பிரிவில் உள்ள மற்றப்பிரிவினர் 473 இடங்களை தேர்வு செய்தனர். அந்தவகையில் சிறப்பு பிரிவு மூலம் 7 ஆயிரத்து 797 இடங்கள் நிரம்பின. அதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்தப்படும் என்று கலந்தாய்வை நடத்தும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் அறிவித்து இருந்தது. அதன்படி, 4 சுற்று கலந்தாய்வும் நேற்றுடன் நடந்து முடிந்துள்ளது.

மாணவர் சேர்க்கையில் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்து இருப்பதைதான் தற்போதைய புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மீதி இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு ஏதுவாக 5 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்து இருந்தார்.

அதன்படி, துணை கலந்தாய்வு வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி, 23-ந் தேதி வரை (சனிக்கிழமை) வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு, சான்றிதழ் பதிவேற்றம் நேற்றுடன் முடிவடைந்து இருக்கிறது. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியாகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து