தமிழக செய்திகள்

வெளியூர்காரர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதை கண்டித்து தாலுகா அலுவலகம் முற்றுகை

வெளியூரை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதை கண்டித்து சேதாரகுப்பம் கிராம மக்கள் வந்தவாசி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி

வெளியூரை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதை கண்டித்து சேதாரகுப்பம் கிராம மக்கள் வந்தவாசி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளியூர்காரர்களுக்கு பட்டா

வந்தவாசி தாலுகாவுக்குட்பட்ட சேதராகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வெளியூர் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வருவாய்த் துறை நடவடிக்கை எடுத்தனராம். இதனையறிந்த சேதராகுப்பம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் வெளியூர் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வருவாய்த்துறையினரை கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர் பவுனுகிருஷ்ணன், துணைத் தலைவர் துளசி வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் வந்தவாசி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தில் 3.42 ஏக்கர் அரசு தோப்பு புறம்போக்கு நிலம் உள்ளது. இதனைத் தவிர வேறு அரசு புறம்போக்கு நிலம் எதுவும் எங்கள் கிராமத்தில் இல்லை.

அந்த இடத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் கட்டித் தருமாறு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த நிலையில் அந்த இடத்தில் வெளியூர் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கும் நடவடிக்கையில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் எதிர்காலத்தில் எங்கள் கிராமத்தில் அரசு கட்டடங்கள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள இடம் இல்லாமல் போய்விடும் வாய்ப்புள்ளது. எனவே அந்த இடத்தில் வெளியூர் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்குவதை கண்டித்து நாங்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோரிக்கை மனு

இதனைத் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் தாசில்தார் ராஜேந்திரனிடம் மனு அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததை அடுத்து சேதராகுப்பம் கிராம மக்கள் புறப்பட்டுச் சென்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு