புதுடெல்லி,
டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
அப்போது நகர்ப்புறம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய ரூ.2,029 கோடி நிதியை வழங்கவும், இயந்திர உற்பத்தி பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்கவும் கோரிக்கை விடுத்தார்.
அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது என்றார்.