தமிழக செய்திகள்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி

சின்னசேலத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை அதிகா ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

சின்னசேலம், 

சின்னசேலம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சின்னசேலம் தேர்தல் துணை தாசில்தார் குணசேகரன் சின்னசேலம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், வாக்காளர் அட்டையில் சம்பந்தப்பட்ட வாக்காளரின் ஆதார் எண்ணை சரியான முறையில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த மக்களிடம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த ஆய்வின்போது சின்னசேலம் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து