தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு

அயோத்தியாப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

அயோத்தியாப்பட்டணம்

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 24). இவர் அயோத்தியாப்பட்டணம் அருகே மின்னாம்பள்ளியில் சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ராஜ்குமார் மீது மோதியதாக தெரிகிறது. இதில் தூக்கி வசப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த சங்ககிரி பகுதியை சேர்ந்த மனோகரன் (37), பின்னர் அமர்ந்து இருந்த சாமுனில் இஸ்லாம் (26) ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சாமுனில் இஸ்லாம் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை