தமிழக செய்திகள்

ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு

ஜோலார்பேட்டை அருகே ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

ஜோலார்பேட்டையை அடுத்த தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் குருபரன் (வயது 55). அந்தப்பகுதியில் திருமண மண்டபம் நடத்தி வருகிறார். இவர் நேற்று திருப்பத்தூர் பகுதியில் உள்ள வங்கியில் ரூ.1 லட்சம் எடுத்து அதனை தனது ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் வைத்துக்கொண்டு ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றார். அங்கு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று திரும்பி வெளியே வந்தபோது தனது ஸ்கூட்டரின் சீட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து குருபரன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்