தமிழக செய்திகள்

திருடியவர் கைது

இரும்பு பொருட்கள் திருடியவர் கைது

தினத்தந்தி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி தபால்-தந்தி காலனியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 49). சென்டிரிங் காண்டிராக்டராக உள்ளார். இவர் முத்தையாபுரம்- துறைமுகம் ரோட்டில் தரைப்பாலம் அமைக்கும் பணி செய்து வருகிறார். கடந்த மாதம் 10- ந்தேதி சூசை நகரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் கிழக்கே தரைப்பாலம் சென்டிரிங் அடித்து கான்கிரீட் போட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் தரைப்பாலத்தை பார்ப்பதற்காக சென்றார். அப்போது தரைப்பாலத்தில் சென்டிரிங் போடுவதற்காக பயன்படுத்திய இரும்பு பொருட்கள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தை சேர்ந்த சிவலிங்கத்தை கைது செய்தார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்