தமிழக செய்திகள்

திருடிய வாலிபர் கைது

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் காரில் இருந்து பணம் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி

நெல்லை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. ஏ. காலனியை சேர்ந்தவர் சங்கரன் (வயது 52). இவர் நேற்று முன்தினம் தனது காரை நெல்லை புதிய பஸ் நிலையம் பூங்கா அருகே நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் சங்கரனிடம் பேச்சு கொடுப்பதுபோல் பேசி காரில் இருந்த ஒரு பையை திருடிச் சென்றார். அந்த பையில் ரூ.3 ஆயிரத்து 500 மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. இதுகுறித்து சங்கரன் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மேலப்பாளையம் சிவராஜபுரத்தை சேர்ந்த முருகன் மகன் ராஜாசெல்வின் (25) என்பவர் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்