தமிழக செய்திகள்

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தினத்தந்தி

திருச்சி:

திருச்சி பொன்மலைப்பட்டியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை எரித்ததாகவும், கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி ஆஞ்சநேயர் கோவில் அருகில் நடந்து சென்றவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி, சட்டை பையில் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றதாகவும் பொன்மலைப்பட்டி அடைக்கலமாதா கோவில் தெருவை சேர்ந்த டேனியல் இருதயராஜின் மகன் தாமஸ் ஸ்டாலினை(வயது 21) போலீசார் கைது செய்தனர். மேலும், விசாரணையில் தாமஸ் ஸ்டாலின் மீது பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு மற்றும் பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் கேடு விளைவித்ததாக 4 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. தாமஸ் ஸ்டாலின் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதோடு, ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் என்பதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிந்துரையின்பேரில், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?