தமிழக செய்திகள்

பஸ் சக்கரத்தில் சிக்கி அரசு ஊழியர் பலி - பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது நிகழ்ந்த சோகம்..!

திருவள்ளூரில் அரசு ஊழியர் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் வசித்து வருபவர் ஆறுமுகம் (58). இவர் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் பணி முடிந்து வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மணவாள நகரில் உள்ள சென்டர் மீடியாவில் ஏறி இறங்க முயன்றபோது கால் தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது பூந்தமல்லியிலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்த அரசு பேருந்தின் வலது புற முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த அவரை உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்