தமிழக செய்திகள்

மின்மாற்றி தீப்பிடித்து எரிந்தது

சின்னசேலம் அருகே மின்மாற்றி தீப்பிடித்து எரிந்தது

தினத்தந்தி

சின்னசேலம்

சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் கிராம எல்லையில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மின்மாற்றி திடீரென தீப்பிடித்து எாந்தது. இதனால் நெருப்பு ஜூவாலையுடன் கரும்புகை உருவானது. இதைப்பார்த்த அப்பகுதி விவசாயிகள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சின்னசேலம் தீயணைப்பு நிலைய அதிகாரி பரமசிவம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ரசாயன நுரை கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். உயர் மின் அழுத்தம் காரணமாக மின்மாற்றி தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்