தமிழக செய்திகள்

சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு

சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற திடீரன இறந்தார்.

சிவகாசி, 

சாத்தூர் தாலுகாவில் உள்ள ஒத்தையால் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி கற்பகவள்ளி (வயது 53). இவருக்கு பித்தப்பையில் கல் இருப்பதாக உடல்பரிசோதனையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். 10-ந்தேதி அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அன்று அறுவை சிகிச்சை செய்ய தயாரான போது கற்பகவள்ளிக்கு வலிப்பு வந்ததாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அறுவை சிகிச்சை செய்யவில்லை என கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரம் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து விட்டு நெல்லையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அங்கு கற்பகவள்ளியை டாக்டர்கள்,சோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் கருப்பசாமி சாத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது தாய்க்கு அளித்த தவறான சிகிச்சை காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமான சாத்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...