தமிழக செய்திகள்

லாரி மோதி மற்றொரு லாரி கவிழ்ந்தது

லாரி மோதி மற்றொரு லாரி கவிழ்ந்தது.

தினத்தந்தி

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு சாலையில் நேற்று மதியம் வந்த சிமெண்டு கலவை எந்திரம் லாரி நெடுஞ்சாலையை திருச்சி நோக்கி திரும்பியது. அப்போது அந்த லாரி மீது பின்னால் கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையத்தில் சிமெண்டு மூட்டைகளை இறக்கி விட்டு, அரியலூரை நோக்கி வந்த லாரி மோதியது. இதில் சிமெண்டு கலவை லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதன்மீது மோதிய லாரியின் முன்புறம் சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை