தமிழக செய்திகள்

தொப்பூர் கணவாயில்லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

நல்லம்பள்ளி

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம் அடைந்தார்.

லாரி கவிழ்ந்தது

மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காய பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கோவைக்கு புறப்பட்டது. இந்த லாரியை சேலம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் குமார் (வயது43) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று காலை வந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் வெங்காய மூட்டைகள் சாலையில் சரிந்தது. இந்த விபத்தில் டிரைவர் குமார் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார். மேலும் விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை

இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய டிரைவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்