தமிழக செய்திகள்

கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில்மினி லாரி கவிழ்ந்தது

தினத்தந்தி

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே உள்ள நடுக்கோம்பை ஊராட்சி 3-வது மைல் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் நேற்று இரவு ஒரு மினி லாரியில் மணல் மற்றும் ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக்கொண்டு கொல்லிமலை மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள 38-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென லாரி கவிழ்ந்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக சிறிது காயத்துடன் மினி லாரி டிரைவர் சுரேஷ் உயிர் தப்பினார். பின்னர் காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கிச்சைக்காக சேந்தமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை