தமிழக செய்திகள்

சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது

இடையக்கோட்டை அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.

தினத்தந்தி

தூத்துக்குடியில் இருந்து குருணை அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை, திருச்செங்கோட்டையை சேர்ந்த நடராஜ் (வயது 50) என்பவர் ஓட்டினார். நேற்று அந்த லாரி தாடிக்கொம்பில் இருந்து இடையக்கோட்டை வழியாக கரூர் செல்லும் சாலையில் நவலூற்று கிராமம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலயோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியின் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த டிரவர் நடராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டனர். பின்னர் அவரை அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து இடையக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?