தமிழக செய்திகள்

லாரியில் திடீரென தீப்பற்றி எரிந்தது

லாரியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

தினத்தந்தி

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர்-செங்குணம் பிரிவு சாலை அருகே நேற்று காலை ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியின் முன்பக்க என்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை கண்ட டிரைவர் லாரியை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கினார். இதையடுத்து லாரியின் முன்பக்கம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து தீயணைப்பான் கருவியை கொண்டு, லாரியில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். பின்னர் தண்ணீரை ஊற்றி தீய அணைக்க முயன்றனர். இதற்கிடையே பெரம்பலூர் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து