நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே செட்டிகோம்பை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சின்னசாமி (வயது 50), பழனிசாமி (47). இவர்கள் இருவருக்கும் இடையே நில பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக தொப்பூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்தி இரு தரப்பை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.