தமிழக செய்திகள்

தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்தது

தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்தது.

தினத்தந்தி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் வைரிசெட்டிப்பாளையத்தை அடுத்துள்ள ஏரிக்காட்டை சேர்ந்தவர்கள் கணேசன். இவரது சகோதரர் பாலா. இவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஒரே வீட்டில் அடுத்தடுத்த பகுதிகளில் குடியிருந்தனர். தற்போது உப்பிலியபுரம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கணேசன் மற்றும் பாலா குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் ஒரு பக்க மண்சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வெளிப்புறமாக சுவர் விழுந்ததால், வீட்டில் தூங்கிய 6 பேரும் உயிர் தப்பினர். இது பற்றி தகவல் அறிந்த வைரிசெட்டிப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் நளினி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு