ஈரோடு,
மேற்கு தொடர்ச்சி மலைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதையடுத்து, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில், நீர்வரத்து வினாடிக்கு 3028 கனஅடியில் இருந்து 3965 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தற்போது அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர்இருப்பு 32.4 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 2900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.