தமிழக செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நீர்வரத்து குறைந்தது

தினத்தந்தி

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது மழை குறைந்த காரணத்தால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,058 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 82.62 அடியாக இருந்தது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 411 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 82.67 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்