தமிழக செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று வினாடிக்கு 5 ஆயிரத்து 507 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

தினத்தந்தி

மேட்டூர்,

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 9 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடியாக சரிந்தது.

ஆனாலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 7 ஆயிரத்து 905 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 507 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று காலை 109.02 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 108.60 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை