தமிழக செய்திகள்

கடையில் இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

கருங்கல் அருகே கடையில் இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

கருங்கல், 

கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு பறம்புவிளை பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவர் கருங்கல் அருகே மத்திகோடு கொல்லம்பட்டி பகுதியில் இரும்பு மற்றும் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வெளியே சென்றிருந்தபோது, கடையில் அவருடைய மனைவி லீமா (வயது46) இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் வந்தனர். அவர்கள் பெயிண்ட் வாங்குவது போல் லீமாவிடம் பேசினர். அப்போது, திடீரென அந்த மர்ம நபர்களில் ஒருவன் லீமாவின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்