தமிழக செய்திகள்

பாசத்துடன் பாயாசம் கொடுத்து... மூதாட்டியிடம் நகை திருடிய பெண்!

சென்னையில் பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் இருந்து 5 சவரன் நகையை பறித்துச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ராயபுரம் பிவி கோவில் தெருவில் மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். அவர் கோவிலுக்குச் செல்லும் போது பத்மாவதி என்ற பெண் பழக்கமாகியுள்ளார். இந்நிலையில் பத்மாவதி தனக்கு திருமண நாள் என்று கூறி மூதாட்டிக்கு பாயாசம் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த பாயாசத்தில் மயக்க மருந்து கலந்திருந்ததாக தெரிகிறது. அதை அருந்திய மூதாட்டி சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து மயக்கமடைந்த மூதாட்டியிடம் இருந்து 5 சவரன் நகையை பத்மாவதி திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் நகை காணாமல் போனதையறிந்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி, ராயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பத்மாவதியை கைது செய்து அவரிடம் இருந்து 5 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து