தமிழக செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் கொரோனாவுக்கு பலி

பெண் ஒருவர் கடந்த மாதம் 29-ந் தேதி கணபதிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் நால் ரோடு பகுதியை சேர்ந்த 47 வயது பெண் ஒருவர் கடந்த மாதம் 29-ந் தேதி கணபதிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 8-ந் தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த பெண் பரிதாபமாக இறந்தார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்