தமிழக செய்திகள்

உப்பு மூட்டைகளை பாதுகாக்கும் பணி தீவிரம்

அதிராம்பட்டினத்தில் தொடர் மழை காரணமாக உப்பு மூட்டைகளை பாதுகாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் தொழிலாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்

தினத்தந்தி

அதிராம்பட்டினம்;

அதிராம்பட்டினத்தில் தொடர் மழை காரணமாக உப்பு மூட்டைகளை பாதுகாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் தொழிலாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

உப்பு உற்பத்தி

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தம்பிக்கோட்டை மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 2ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட உப்பளங்கள் உள்ளன. தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்மு உள்ளது.உப்பு உற்பத்தியில் ஏற்பட்ட நஷ்டத்தால் தொழிலை விட்டுவிட்டு உற்பத்தியாளர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். இந்தநிலையில் குறிப்பிட்ட சில ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே சிலர் உப்பு உற்பத்தி தொழிலிலை வேறு வழியின்றி செய்து கொண்டிருக்கின்றனர்.

மூட்டைகள் பாதுகாப்பு

கடந்த சில நாட்களாக அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தொடர்ந்து கோடை வெயில் வெளுத்து வாங்கி வந்தது இதனால் உற்பத்தி சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆனால் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் மழைநீர் உப்பளங்களில் தேங்கியுள்ளது.இதனால் உப்பு வாரும் நிலையில் இருந்த உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர். இதன் மூலம் உப்பு உற்பத்தியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி பெய்து வரும் மழையால் தற்போது சாப்பாடு உப்பு மூட்டைகளை பாதுகாக்கும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உப்பு உற்பத்தி பாதிப்பால் தொழிலாளர்கள் மிகவும் வேதனை அடைந்து உள்ளனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்