தமிழக செய்திகள்

மனைவியின் கண் முன்னே தொழிலாளி வெட்டிக்கொலை

திருப்பத்தூர் அருகே மனைவியின் கண் எதிரே தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கூலி தொழிலாளி

திருப்பத்தூர் அருகே உள்ள ஏ.கே.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் சிலம்பரசன் (வயது 35). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகிய முனா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சிலம்பரசன் வீட்டில் வாத்து வளர்த்து வருகிறார். இந்த வாத்துகள் அதே பகுதியில் உள்ள விவசாயி வெங்கடேசன் (60) என்பவரின் வீட்டின் அருகே செல்வது தொடர்பாக வெங்கடேசனுக்கும், சிலம்பரசனுக்கும் இடையே தகராறு இருந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று சிலம்பரசனின் வாத்துகள் வெங்கடேசனின் வீட்டின் அருகே சென்றுள்ளது. அதை பார்த்த சிலம்பரசனும், அவரது மனைவியும் வாத்துகளை பிடித்து உள்ளனர். அப்போது ஒரு வாத்து அருகில் உள்ள கிணற்றில் விழுந்துவிட்டது.

வெட்டிக்கொலை

இதையடுத்து சிலம்பரசன் கிணற்றில் விழுந்த வாத்தை மேலே எவ்வாறு கொண்டு வருவது என கிணற்றின் அருகே நின்று பார்த்துக்கொண்டு இருந்தார். அவரது மனைவி யமுனா அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கடேசன் திடீரென சிலம்பரசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிலம்பரசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த யமுனா கூச்சலிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிலம்பரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு