தமிழக செய்திகள்

ஆற்றில் குளிக்கச் சென்ற தொழிலாளி பலி

செய்யாறில் ஆற்றில் குளிக்கச் சென்ற தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

செய்யாறு

செய்யாறு டவுன் திருவோத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 40), கூலி தொழிலாளி. நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இந்த நிலையில் செய்யாறு ஆற்றில் அவர் பிணமாக மிதந்தார்.

இதையறிந்த செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று பாபுவின் உடலை மீட்டு செய்யாறு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பாபுவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வரும் எனவும், ஆற்றில் குளிக்கும் போது வலிப்பு நோய் வந்து இறந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்