தமிழக செய்திகள்

மாடியில் இருந்து கீழே தள்ளி வாலிபர் கொடூரக்கொலை

நெல்லையில் மாடியில் இருந்து கீழே தள்ளி வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். விபத்து நாடகமாடிய அவரது நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ஹரிஹர முத்து (வயது 23). இவரது நண்பர்கள் ஜோஸ் செல்வராஜ் (33), செல்வகுமார் (30), சுகுமார் (30), பிரித்தம் (22).

இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் இருந்து ஹரிஹரமுத்து கீழே விழுந்து விட்டதாக கூறி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாவில் சந்தேகம்

இந்தநிலையில் ஹரிஹர முத்து சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் புகார் செய்த நிலையில் போலீசார் ஜோஸ் செல்வராஜ் உள்ளிட்ட 4 பேரிடமும் விசாரித்தனர்.

அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது நேற்று முன்தினம் இரவு சாந்திநகரில் உள்ள பிரித்தம் வீட்டின் மாடியில் வைத்து ஒன்றாக பேசிக்கொண்டிருந்தனர். ஏற்கனவே ஜோஸ் செல்வராஜ் மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. அதனை ஹரிஹர முத்துதான் திருடினார் என்று கூறி 4 பேரும் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தகராறு முற்றவே 4 பேரும் சேர்ந்து ஹரிஹர முத்துவை மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து