தமிழக செய்திகள்

காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்திய வாலிபர்...!

காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

நெமிலி,

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள உத்திரம்பட்டைச் சேர்ந்த 21 வயது மாணவி தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரை அதே பகுதியை சேர்ந்த நித்தீஷ் குமார் (24) என்பவர் காதலித்து வந்துள்ளார்.

மாணவி வீட்டிலிருந்து கல்லூரிக்கு போகும்போதும் திரும்பி வரும்போதும் வழிமறித்து காதலிக்குமாறு நித்தீஷ் குமார் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் மாணவி மறுத்து வந்ததாக கூறப்படுகிறது .

இந்நிலையில் நேற்று மாலை நித்தீஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அங்கு வந்த மாணவியை மடக்கிய நித்தீஷ் குமார், தன்னை காதலிக்க கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து அங்குகிருந்து அவர் சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நித்தீஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்தும், பல இடங்களில் குத்தியும் காயப்படுத்தி உள்ளார். பின்னர், நித்தீஷ்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அதில் படுகாயமடைந்த மாணவி ஆபத்தான நிலையில் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இதுகுறித்து அறிந்த காவேரிப்பாக்கம் போலீஸார் வழக்குபதிவு செய்து தலைமறைவான நித்தீஷ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்