தமிழக செய்திகள்

இளம் பெண் திடீர் மாயம்

திருக்கோவிலூரில் இளம் பெண் திடீர் மாயம் போலீசார் விசாரணை

தினத்தந்தி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் ருத்திரப்பநாயக்கன் தெருவை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மனைவி ஆலியா(வயது 19). இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 1 வருடங்கள் ஆகிறது.

இந்த நிலையில் கணவர் வீட்டில் இருந்த ஆலியா நள்ளிரவில் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல்லா மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன் மற்றும் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஆலியாவை தேடி வருகிறார்கள்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்