தமிழக செய்திகள்

தீக்குளித்த இளம்பெண் சாவுஆர்.டி.ஓ. விசாரணை

இளம்பெண் தீக்குளித்து தற்காலை செய்துகொண்டா

ஈரோடு பெரியசேமூர் வேலாநகர் பகுதியை சேர்ந்தவர் கோபி ராஜா. இவருடைய மனைவி மோனிஷா (வயது 23). கோபி ராஜாவுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று கோபி ராஜா குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனம் உடைந்த மோனிஷா வீட்டில் இருந்த தின்னரை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோனிஷா நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோனிஷாவுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு