தமிழக செய்திகள்

வீடு புகுந்து நகை திருட்டு

வீடு புகுந்து நகை திருடப்பட்டது.

மதுரை அவனியாபுரம் சிக்கந்தர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 53). இவர் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 8 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.