தமிழக செய்திகள்

மயிலாடும் மலை முருகன் கோவிலில் திருட்டு

ஆம்பூர் அருகே மயிலாடும் மலை முருகன் கோவிலில் நடந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

ஆம்பூர்

ஆம்பூர்அருகே மயிலாடும் மலை முருகன் கோவிலில் நடந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையெட்டி உள்ள மயிலாடும் மலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஆடி கிருத்திகை பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜை முடித்துவிட்டு சென்றுள்ளனர். நேற்று காலை நிர்வாகிகள் சென்றபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியில் பணம் மற்றும் கோவிலில் இருந்த சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு