தமிழக செய்திகள்

பட்டாபிராம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

பட்டாபிராம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகை மற்றும் வெள்ளியை மர்மநபர்கள் திருடு சென்றனர்.

தினத்தந்தி

ஆவடியை அடுத்த பட்டாபிராம் தேவராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் வினோத்குமார். இவருடைய மனைவி ஜான்சி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் வீட்டை பூட்டிவிட்டு பட்டாபிராம் சத்திரம் பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்று தங்கினர்.

நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 1 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பட்டாபிராம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்