தமிழக செய்திகள்

கோவிலில் திருட்டு

விளாத்திகுளம் அருகே கோவிலில் திருட்டு

தினத்தந்தி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள மாவிலோடை கிராமம் பெரிய கண்மாய் கரையில் கருப்பசாமி கோவில் உள்ளது. வழக்கம் போல் பூஜை செய்வதற்காக நேற்று காலையில் பூசாரி பாலமுருகன் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்துள்ளது. கோவிலுக்குள் இருந்த ரூ. 17 ஆயிரம் மதிப்பிலான ரேடியோ ஆம்ப்ளிபயர் திருடப்பட்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காடல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை