தமிழக செய்திகள்

மூதாட்டியிடம் 10 பவுன் நகை திருட்டு

பெரியார் பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 10 பவுன் நகை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 72). சம்பவத்தன்று மதியம் இவர் பெரியார் பஸ் நிலையம் 4-வது பிளாட்பாரத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை யாரோ மர்ம ஆசாமி திருடிச் சென்று விட்டார். நகை திருடு போனதை அறிந்த மூதாட்டி உடனே திடீர்நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.