தமிழக செய்திகள்

2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

சங்கரன்கோவிலில் 2 மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள பாட்டத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 40). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று சுப்புராஜ் திருவேங்கடம் சாலையில் உள்ள டீக்கடையின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கினார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜ் (46). சம்பவத்தன்று இவர் சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, ராஜபாளையத்திற்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரியவந்தது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...