செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 36). இவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து, மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.