தமிழக செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு

ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடப்பட்டது.

தினத்தந்தி

நகை- பணம் திருட்டு

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை கலைஞர் தெருவில் வசித்து வருபவர் வினோலினா. அங்கன்வாடி ஊழியர். இவர் நேற்று வீட்டை பூட்டி கொண்டு வேலைக்கு சென்று விட்டார். அப்போது இவரது வீட்டின் பூட்டை யாரோ மர்ம நபர்கள் உடைத்து 18 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்

மற்றொரு வீட்டில்

அதே பகுதியில் வசித்து வந்த முத்துராமன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை, ரூ.29 ஆயிரம் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு