தமிழக செய்திகள்

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் திருட்டு

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் திருட்டு போனது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் சண்முகசுந்தராபுரத்தை சேர்ந்தவர் வேலு (வயது 64). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நகையை திருப்புவதற்காக ரூ.70 ஆயிரம் மஞ்சள் பையில் வைத்து கொண்டு வந்தார். நகையை திருப்ப முடியாததால் மீண்டும் பணத்தை எடுத்துக்கொண்டு பையை இருசக்கர வாகனத்தின் முன்புறம் தொங்கவிட்டு கொண்டு ராமகிருஷ்ணபுரத்தில் நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் திரும்ப வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தில் பையில் இருந்த ரூ.70 ஆயிரத்தை காணவில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.