தமிழக செய்திகள்

தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம்- இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

திமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டதால் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

திமுக தலைமையகம் அமைந்துள்ள தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளியை பணி இடை நீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் படி கொரோனா விதிமுறைகளை சரிவர பின்பற்றாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிவாலய வளாகத்தில் இருந்து திமுக தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதற்கிடையில், கொரோனா தொற்றை மனதில் கொண்டு திமுகவினர் எந்தவித கொண்டாட்டங்களையும் வீதியில் கூடி நடத்த வேண்டாம் என திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தி உள்ளார். மேலும் கூட்டம் கூடாமல் அண்ணா அறிவாலயத்தில் இருந்து தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது