தமிழக செய்திகள்

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பணியிடமாற்றம்

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேனி,

தேனி மாவட்ட ஆட்சியராக கடந்த 2018 ஆம் ஆண்டு பல்லவி பல்தேவ் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பாக இவர் சென்னை வணிகவரித்துறை இணை ஆணையராக பணியாற்றி வந்தார். தேனி மாவட்டத்தின் 15-வது ஆட்சியராக ஆக பதிவியேற்ற பல்லவி பல்தேவ், அந்த மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற சிறப்பையும் பெற்றார்.

இதையடுத்து பல்லவி பல்தேவ் தேனி மாவட்ட ஆட்சியராக 3 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்லவி பல்தேவ் தற்போது சென்னையில் உள்ள நில நிர்வாகக் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே சமயம், தமிழக அரசின் நிதித்துறையில் இணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த கிருஷ்ணன் உன்னி, தற்போது தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு